• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராய்வதற்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தேவைகளை கவனிப்பதற்கும் அரசாங்கம் விசேட  நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று (01-03-2026) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா சலுகைகள் மற்றும் வசதிகள்

தற்போது நாட்டிற்குள் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது விசா காலத்தை எவ்வித கட்டணமுமின்றி இரண்டு வாரங்களுக்கு (14 நாட்கள்) நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தேவைப்படின் இதனை மேலும் நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். 

நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராயவும் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்தந்த தூதரகங்களுடன் கலந்துரையாடி முறையான வேலைத்திட்டமொன்றை உடனடியாகத் தயாரிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள தடைகளை கருத்திற்கொண்டு, வெளிவிவகார அமைச்சு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து மாற்று வான்வழிகள் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது. 

அதேபோல், இலங்கைக்கு வர எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித இடையூறுமின்றி வருகை தருவதற்கு மாற்று இடங்கள் (Destinations) குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவும், அதற்கான வசதிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

செயற்படும் கட்டுப்பாட்டு கருமபீடம்

சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க பல அரச நிறுவனங்களின் ஊடாக 24 மணிநேரச் சேவைகள் நிறுவப்பட்டுள்ளன:

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை: நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், 1912 என்ற உடனடி அழைப்பிலக்கத்தின் ஊடாக எந்தவொரு பிரச்சினையையும் அறிவிக்க முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்: வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க 1989 என்ற அவசர அழைப்பிலக்கத்தின் ஊடாக விசேட கட்டுப்பாட்டு அறை செயற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றுடன் மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சு தலையிட்டு மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளது. அவசர காலங்களில் விரைவாகச் செயற்படவும், இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்துத் தூதரகங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் தயார் நிலையில் உள்ளன.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் உள்ளக போக்குவரத்து நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும், நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் உடனடித் தீர்மானங்களை எடுக்கவும் அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக இந்தக் கலந்துரையாடலில் மேலும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிவிவகார ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சாமிந்த பத்திராஜ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மற்றும் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், சுற்றுலாத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை உள்நாட்டு சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் (SLAITO) தலைவர் நளின் ஜயசுந்தர, செயலாளர் நிலான் விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் (THASL) உறுப்பினர்களான சந்திரா விக்ரமசிங்க, நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related

Tags: Middle Eastமத்திய கிழக்கு நெருக்கடிவேலைத்திட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கத்தின் ‘ஆரோக்கியம்’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!

Next Post

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

Related Posts

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!
இலங்கை

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!
இலங்கை

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!
அமொிக்கா

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
Next Post
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

மத்திய கிழக்கு பதட்டம்; எண்ணெய் விலை உயர்வு!

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

பஷில் ராஜபக்ஷவை கைது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

0
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

0
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

0
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

0

பஷில் ராஜபக்ஷவை கைது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17

Recent News

பஷில் ராஜபக்ஷவை கைது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.