ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் சமூக நலத்திட்டங்களின் மறுமதிப்பீடு இவ்வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக “Prime d’activité” உதவித்தொகை மாதத்திற்கு சராசரியாக 50 யூரோ அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 மில்லியன் மக்கள் நேரடியாக பயனடைவார்கள். இந்த உதவித்தொகையின் கூடுதல் போனஸ் 184 யூரோவில் இருந்து 239 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை (SMIC) தாண்டி வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு இது முக்கிய ஆதரவாக அமையும்.
குடும்ப நலத்திட்டங்களை வழங்கும் CAFஅமைப்பின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் 0.9% அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஆண்டுதோறும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் வழக்கமான திருத்தமாகும்.பல நலத்திட்டங்கள் இதில் அடக்கம் இந்த உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான AAH, குறைந்த வருமானத்திற்கான RSA, குடும்ப வன்முறைக்கு உள்ளானவர்களுக்கான அவசர உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அடங்குகின்றன.
அத்துடன் குடும்ப உதவித்தொகைகளை கணக்கிடும் அடிப்படை தொகை 0.8% உயர்ந்து 478.16 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குழந்தை மற்றும் குடும்ப நலத்திட்டங்களின் தொகைகள் மறுகணக்கிடப்படுவதுடன், மின்சாரம் மற்றும் எரிசக்தி செலவுகளை சமாளிக்க வழங்கப்படும் “Cheque Energy” இவ்வாரம் முதல் தகுதி பெற்றவர்களுக்கு தானாக வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
நிக்கோட்டின் பைகள் மற்றும் வாய்மூலம் பயன்படுத்தப்படும் இதர பொருட்கள் புதன்கிழமை முதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன. இளைஞர்களிடையே அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிவிப்பு செயல்முறை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. குடிமக்கள் தங்களது முன்பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களை சரிபார்த்து திருத்திக் கொள்ள முடியும் என்பதுடன் 2026–2027 கல்வியாண்டுக்கான உயர் கல்வி சேர்க்கை விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பங்களை உறுதிப்படுத்த வேண்டிய கடைசி நாள் நெருங்கி வருகிறது.
இதேவேளை, எரிவாயு விலையில் குறைவஏப்ரல் மாதத்தில் எரிவாயு விலையில் சிறிய அளவு குறைவு ஏற்பட்டுள்ளது. சமையல் மற்றும் வெந்நீருக்கான விலை 0.6% குறைந்துள்ளதுடன், வெப்பமூட்டலுக்கான விலையும் குறைந்துள்ளது.














