ஈரான், இஸ்ரேல் மீது பல கட்டங்களாக ஏவுகணைகளை ஏவியதாகவும், மேலும் அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக யேமனில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்தது.
ஏமனைச் சேர்ந்த இரண்டு ஆளில்லா விமானங்கள் திங்களன்று அதிகாலையில் இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
ஆனால் மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுத்தி போராளிக் குழு சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி, போரில் நுழைந்து,
இது மத்திய கிழக்கை சீர்குலைத்துள்ள மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் ஒரு மாத கால ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வரும் நாட்களில் “அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை” நடத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
எனினும், இந்தப் பேச்சுவார்தைகளில் கலந்துகொள்ள அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.













