இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்த அதன் ஊழியர்களுக்கான இழப்பீடு இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இதன் முதல் கட்டத்தின் கீழ் மொத்த இழப்பீட்டில் 50 சதவீதம் திறைசேரி நிதியிலிருந்து வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆவணம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரும் வாரத்திற்குள் அதற்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி, இழப்பீட்டுத் தொகையின் முதல் 50 சதவீதம் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு மே 15 ஆம் திகதிக்குள் வழங்கப்படும்.
மீதமுள்ள 50 சதவீதம் அதனைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.














