லாக்ஃப்ஸ் கேஸ் நிறுவனம், நேற்று (06) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 545 அதிகரிக்கப்பட்டுள்ளது – புதிய விலை 6,245 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ கிராம் கேஸ் சிலிண்டரின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது – புதிய விலை 2,500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகள் கொழும்பு மாவட்டத்திற்குள் பொருந்தும்.













