ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், சாதனை அளவிலான வெப்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களில் பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்துள்ளது.
பிரிட்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கடும் வெப்பத்தால் தவித்தன.
சில பகுதிகளில் பதிவான சாதனை அளவிலான வெப்பநிலையால் பாடசாலைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
அத்துடன் ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மூடும் நிலையும் ஏற்பட்டது.
ஐரோப்பா உலகின் சராசரி வெப்பமடைதல் விகிதத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது.
இதனால், இத்தகைய நீண்ட கால வெப்ப அலை நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என உலக வானிலை ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.














