தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக, ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான வேலைத்திட்டமொன்று இன்று (27) முற்பகல் நடைபெற்றது.
நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாக பரவுவதைத் தடுப்பதற்காக, சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கு அரச நிறுவனங்களின் மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இருந்து பேர வாவிப் பகுதி வரையிலும், சாரணர் வீதி ஊடாக அலரி மாளிகை வரை இந்த சிரமதான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஆகியோருடன் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டனர்.












