சாகசச் செயல்களுக்குப் பெயர் பெற்ற ரஷ்யத் தம்பதியினர் புதன்கிழமையன்று (02) நியூயோர்க்கின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறி அமைதி முழக்கம் அடங்கிய பதாகை ஒன்றை விரித்தனர்.
இந்த செயலின் காரணமாக இறுதியில் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.
இருவர்களது திருமணத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்த இந்தச் சாகச நிகழ்வு, சமூக ஊடகங்களில் பரவலாகப் பதிவு செய்யப்பட்டது.
கருப்பு நிற கையில்லாத ஆடைகளை அணிந்திருந்த ஏஞ்சலா நிகோலாவ் (33) மற்றும் வான்யா பீர்கஸ் (32)
ஆகியோர், அந்த வானளாவிய கட்டிடத்தின் ஆண்டெனா (antenna) பகுதிக்குச் சென்று, அங்கு ஒருவருக்கொருவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டு அதைக் கொண்டாடினர்.
தரைமட்டத்திலிருந்து 1,454 அடி உயரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, 2024-ல் வெளியான ‘Skywalkers: A Love Story’ என்ற நெட்ஃபிக்ஸ் (Netflix) ஆவணப்படத்தில் இடம்பெற்றது.














