அனுராதபுரம், பொசன் பண்டிகை வளாகத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நகர சபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ளதாவது,
2026.07.01 அன்று, அனுராதபுரம் பொசன் பண்டிகை கொண்டாட்டப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், மூன்று பேருக்கு தாக்குதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அனுராதபுர பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதே நாளில் இரவு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நகர சபை உறுப்பினர் ஒருவரை உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனுராதபுர புபுது புர, வன்னியன் குளம் மற்றும் லபியாவ நாரத மாவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வாகனங்களை நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலால் காயமடைந்த இருவர் அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை அனுராதபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















