• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு

Hanushya P by Hanushya P
2026/07/08
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச மாநாட்டினை நடாத்தவுள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகளிலும் தமிழர் என்கிற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் அனைத்து பாகங்களிலும் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அரச படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டபின்னர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமலாக்கப்படுள்ளனர். இந்தத் துயர் தோய்ந்த வரலாறு 1948 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. வகைதொகையற்ற கணக்கில் தமிழ் இளையவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்றோஇ அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாத இலங்கை அரசு,  இந்த விடயத்தில் பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகிறது.

விசாரணை என்கிற பெயரில் திருடனே குற்றவாளியை தேடும் படலத்தை அரசு அரங்கேற்றி வருகின்றது. நீதி கோரும் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் குறித்த பலத்த எதிர்ப்பையும்இ அதிருப்தியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வெளிப்படுத்தியே வந்திருக்கின்றோம்.

இப்போது ஆட்சிபீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்இ ஏனைய அரசுகளைவிட மிகத் தந்திரோபாயமாக எமது விடயத்தை கையாள்வதை அவதானிக்கிறோம். தெற்கில் தமது சிங்கள இளைஞர்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் இளையோரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

எனவே தெற்கோடு கைகோர்த்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்கின்றனர். அடிப்படையில் அறமற்ற இந்த வாதம்,  எமது கண்ணீரை விலை பேசுகிறது.

எமது பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு நாம் நட்ட ஈட்டையோ அல்லது அரச வேலை வாய்ப்புக்களையோ பெற்றுக்கொண்டு மரணச் சான்றிதழில் கையெழுத்திட தயாரில்லை. ஆனால் தெற்கு அதனை எப்போதோ செய்துவிட்டது. நாம் எமது பிள்ளைகள் எங்கே என்றே கேட்கிறோம். அதற்கான நீதியைதான் கூறுகின்றோம்.

எமக்கு முன்னால் செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளைக்காட்டி, கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம்.

எனவே அரசு வழங்கும் மிகப்பெரிய நட்ட ஈட்டுத்தொகையை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதை நோக்கி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய எம்மை தள்ளிவிடும் உளவியல் போரை இந்த அரசு நடத்தி வருகின்றது.

நீதிகோரி நீண்டகாலம் நாம் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இதுவரை 400 இற்கும் மேற்பட்ட தாய்இ தந்தையர் நீதி கிடைக்காமலே இறந்துவிட்டனர். அவர்களின் இறப்பின் பின்னர் காணாமலாக்கப்பட்டவரை தேடும் வீச்சும் அருகிவருகிறது.

இவ்வாறானதொரு நிலையில் தான் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேச நீதியைக் கோரும் நிகழ்வாக இவ்வருட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை அனுஷ்டிக்கவுள்ளோம். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவினையும் எதிர்பார்த்திருக்கிறோம்.

Related

Tags: international conference.Missing personsnorth-eastOn August 30
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்திடம் மண்டியிட்டு 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!

Next Post

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

Related Posts

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

2026-08-16
டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!
இலங்கை

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

2026-08-16
நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!
இலங்கை

நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!

2026-08-16
Next Post
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.