சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்தனர்.
வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக, இன்று (30) பிற்பகல் மரம் ஏற்றிச் சென்ற லொறியுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக லொறி சாரதியை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.















