யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அறிக்கைகளின்படி, தேவையான கல்வித் தகுதிகள் இல்லாத நிலையிலும் யோஷித ராஜபக்ஷ இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.













