பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க , அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து சூதாட்ட விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரபுக்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
இது, பந்தயத் தரகர்கள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கான குழுகளுக்கு இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் 173 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், சூதாட்டத் துறையை ஊக்குவிக்கும் டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துவோரின் பெருக்கத்துக்கு பதிலளிப்பதில் அரசாங்கம் “மிகவும் செயலற்றதாக” இருந்துள்ளதாகவும் பிரபுக்கள் சபையின் தொடர்பு குழு தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு கிரேட் பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் பந்தய நிறுவனங்கள், ஸ்லாட் ( slot )இயந்திர மையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து £12.6 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளன. இதேநேரம் 14 லட்சம் பேர் வரை சூதாட்டப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
அதிஷ்ட்ட இலாபச்சீட்டு மற்றும் பந்தய மைதானங்களுக்கு விலக்கு அளித்து, புகையிலைக்கு போன்று விளம்பரங்களுக்கும் முழுமையான தடை விதிப்பதே, நிதி அழிவு, உறவு முறிவு மற்றும் தற்கொலை போன்ற தீங்குகளைக் குறைப்பதற்கான “மிகவும் பயனுள்ள” வழியாக இருக்கும் என அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.















