இங்கிலாந்தில் குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஆயுளை நீடிக்கும் மருந்து தேசிய சுகாதார சேவை மூலம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கும் மருந்து தயாரிப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, HER2-குறைவான முற்றிய மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பெண்கள் இன்று இந்த மருந்தைப் பெற முடியும் என தேசிய சுகாதார சேவை குறிப்பிட்டுள்ளது .
இங்கிலாந்தில் வருடாந்தம் கண்டறியப்படும் 60 ஆயிரம் புதிய மார்பகப் புற்றுநோய் பாதிப்புகளில், ஏழில் ஒருவருக்கு HER2 மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதாகவும் தேசிய சுகாதார சேவை சுட்டிக்காட்டியுள்ளது .
மருத்துவப் பரிசோதனைகள், சாதாரண கீமோதெரபியுடன் ஒப்பிடும்போது, என்ஹெர்டு ( Enhertu) மருந்து, நோய் முன்னேற்றமில்லா சராசரி உயிர்வாழும் காலத்தை 5.1 மாதங்களிலிருந்து 9.9 மாதங்களாக, அதாவது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .














