கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தகுளிய – கற்பிட்டி – அந்தர குடாவ பகுதியில் நேற்று (16) மாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
கற்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அதன் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத் தூண் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும், அதில் பயணித்த சிறு குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 6 மற்றும் 40 வயதுடைய கந்தகுளிய பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













