• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த கெஹல்பத்ரா பத்மேவை, அடுத்த மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் உயர் பாதுகாப்பினைக் கொண்ட பூசா சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகவும் சந்தேகிக்கப்படும் ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளிலிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழு நடிகைகள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் அவற்றில் இருந்து பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கைப்பேசிகளிலிருந்தும் நீக்கப்பட்ட தரவுகள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 8,841 தொலைபேசி அழைப்பு விபரங்கள், 3,26,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிக்குறிப்புக்கள் மற்றும் 5,039 காணொளிகள் என்பன அவற்றில் அடங்கியுள்ளன.

சந்தேக நபரின் தொலைபேசிகளில் ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், பெயரிடப்பட்ட நபர்கள் எவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதன் மூலம் அர்த்தப்படுத்த முடியாது என புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்த தகவல்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் கண்டு பிடிக்கப்பட்டு, அது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 19 பேரின் கடவுச்சீட்டுப் புகைப்படங்கள் மற்றும் 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேறிய கெஹல்பத்தர பத்மே, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சுமார் 15 முறை பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

இந்தநிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 3ஆம் திகதி வரை அவரை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related

Tags: kehelpathraptmesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

Next Post

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

Related Posts

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
இலங்கை

2026-08-26
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

2026-08-26
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

2026-08-26
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்
இலங்கை

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

2026-08-26
Next Post
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

0
பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

0
கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

0
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

0
பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

2026-08-26
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

2026-08-26
கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

2026-08-26
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

2026-08-26
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.