கோதட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீம்லக்ஸ் மாவத்தை பகுதியில் நேற்று (30) மாலை கொழும்பு, மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 1 கிலோ 14 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய கோதட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருகிறது.













