ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை நள்ளிரவு முதல், 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவு உற்பத்தி நிறுவனங்கள், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் (29) முதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக ‘பிரீமா’ (Prima) மற்றும் ‘செரண்டிப்’ (Serendib) ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்திச் செலவுகள் உயர்வு ஆகியவை இந்த விலை மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அந்த உயர்வுக்கு அமைவாகவே பாணின் விலையையும் தற்சமயம் அதிகரிக்கப்பட்டுள்ளது.














