‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான 2026 ஆகஸ்ட் மாத உதவித்தொகை இன்று (3) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 618,352 முதியவர்களுக்கு, முதியோர் கொடுப்பனவாக மொத்தம் 3.091 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் வரும் 70 வயதுக்கு மேற்பட்ட 78,260 முதியவர்களின் ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகளில், இன்று 391.3 மில்லியன் ரூபா வைப்பிலிடப்படவுள்ளது.
தகுதிவாய்ந்த பயனாளிகள் இன்று முதல் தங்கள் ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகளிலிருந்து தங்களுக்குரிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.













