மிக் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்.
சர்ச்சைக்குரிய மிக் விமான கொள்முதல் நடவடிக்கை தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க, அவர் இன்று (11) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்தார்.
பல மணிநேரம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.














