முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
மிக் (MiG) போர் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அவர் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற இந்த சர்ச்சைக்கும் உரிய கொடுக்கல் வாங்கல் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
இதே விவகாரம் தொடர்பாக, இலங்கை விமானப் படையின் முன்னாள் தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக்கவும் கடந்த தினம் நேற்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














