‘நாடே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 828 சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிராகத் தடுத்து வைக்கும் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
மேலும் நான்கு பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 468 கிராம் ஹெரோயின், 542 கிராம் ஐஸ் மற்றும் 114 கிலோகிராம் 929 கிராம் கஞ்சா என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.













