களு ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கணிசமான மழையைத் தொடர்ந்து, அதன் துணைப் படுகையான ‘குடா கங்கை’ (Kuda Ganga) பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் ‘அம்பர்’ (Amber) நிற வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (20) காலை 9.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, திங்கட்கிழமை (21) காலை 9.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
புலத்சிங்கள, மதுரவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட குட கங்கை மற்றும் மகுரு கங்கை பள்ளத்தாக்குகளின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆற்றுப் படுகையை அண்மித்த வழியாகச் செல்லும் சாலைகள் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.
அதேவேளையில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்களும் வாகன சாரதிகளும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.














