கனமழை காரணமாக உயர்ந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மில்லகந்தவில் உள்ள குட கங்கை, பத்தேகமவில் உள்ள ஜிங் கங்கை மற்றும் தல்கஹகொடவில் உள்ள நில்வல கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் இன்னும் சிறிய அளவிலான வெள்ள நிலையை எட்டியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இப்பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
நில்வல கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியிருந்த போதிலும், அதுவும் தற்போது குறைந்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.














