• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘சிக்மா’ மூலம் எனக்கான அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்: ஜேசன் சஞ்சய்

‘சிக்மா’ மூலம் எனக்கான அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்: ஜேசன் சஞ்சய்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/09/28
in சினிமா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

‘சிக்மா’ படம் வெளியான பின்பு, அதன் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கி, திரைத் துறையில் தன் பயணத்தை தொடர விரும்புவதாக தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் அக்டோபர் 2-ம் திகதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், தான் எப்படி அறியப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

‘உங்களை தமிழக முதல்வரின் மகனாக பார்க்க வேண்டுமா? அல்லது ஒரு சூப்பர் ஸ்டாரின் மகனாகவா?  25 வயதில் ஒரு படத்தை இயக்கி வெளியிடும் ஓர் இயக்குநராக பார்க்க வேண்டுமா? மக்கள் உங்களைப் இப்படிதான் பார்க்க வேண்டும் என நீங்கள் விருப்புகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஜேசன் சஞ்சய், ‘‘நான் இதைப் பற்றி அடிக்கடி யோசித்திருக்கிறேன். அதை மறுக்க முடியாது. எங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அது எப்போதும் தொடரும். இப்போது அதில் அரசியலும் சேர்ந்துள்ளது. இந்தச் சூழலும் பின்னர் மாறலாம்.

இன்னொரு பக்கம், என்னுடைய சிறிய வட்டத்துக்குள் நான் ஒரு படத்தை இயக்கி திரைத் துறையில் தடத்தை பதிக்க முயன்று இருக்கிறேன். அந்தப் படத்தின் மூலம் எனது பார்வையை பதிவு செய்துள்ளேன். இயல்பாகவே எனது எண்ணம் என்வென்றால், எனது படத்தைப் பார்க்கத் தொடங்கிய 5 நிமிடத்துக்குள், இது ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் என்ற எண்ணம் வந்துவிடும். படம் குறித்து சாதகமான, பாதகமான விமர்சனங்கள் வந்தாலும் படம் நான் யார் என்பதைச் சொல்லும்.

‘சிக்மா’ படம் வெளியான பிறகு எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கவும், படத்தின் வெற்றி மூலம் எனது திரைத் துறைப் பாதையை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஓர் இயக்குநராக தனது தந்தையின் நடிப்பில் எது மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜேசன் சஞ்சய், ‘‘அப்பாவின் நகைச்சுவை உணர்வு எனக்கு பிடிக்கும். அவரை அப்படி இயல்பான மனநிலையுடன் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அவர் வீட்டில் அந்த மாதிரியாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

அவருக்குள் இயல்பாகவே ஒரு குழந்தைத்தனம் இருக்கும். ஒருகட்டத்தில் அவர் அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். எனக்கு அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த குணத்தை வெளிக்கொண்டு வர விரும்புவேன்’’ என்று தெரிவித்தார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும் பிரவீன் கே.எல். படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

Next Post

சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!

Related Posts

சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!
சினிமா

சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!

2026-09-28
‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!
சினிமா

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்
சினிமா

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

2026-09-19
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது
சினிமா

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
Next Post
சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!

சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!

சிக்மா’ திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது 4 நாட்கள் மட்டுமே!

0
‘சிக்மா’ மூலம் எனக்கான அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்: ஜேசன் சஞ்சய்

‘சிக்மா’ மூலம் எனக்கான அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்: ஜேசன் சஞ்சய்

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

0
சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு!

சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு!

0
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: