நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை புறக்கோட்டை பகுதியில் மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை (Reusable Plastic Bottles) விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டது.
இந்தச் சுற்றிவளைப்புகளின்போது சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களிலிருந்து 801 மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் வழக்குப் பொருட்களாக அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது.
மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும்போது சம்பந்தப்பட்ட சட்ட மற்றும் தரநிலைத் தேவைகளைப் பின்பற்றுவது வர்த்தகர்களின் பொறுப்பாகும்.
இத்தகைய பரிசோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகளை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ள நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.














