சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மங்கட வீதி பகுதியில், இலங்கை மின்சார சபையின் மூன்று உத்தியோகத்தர்களை மின்சாரம் தாக்கியதில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 65 வயதுடைய கடவத்தை பகுதியைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்தவரும் காயமடைந்த இருவரும் குறித்த பகுதியில் புதிய மின்சாரக் கம்பம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













