கலகொட அத்தே ஞானசார தேரரை சிறை உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமைக்கு தங்களது கவலையைத் தெரிவித்து, மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், ஒரு துறவியின் துறவற ஆடையை அகற்றும் அதிகாரம் சங்க சபைக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இவ்வாறு செய்வது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ள தேரர்கள், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள துறவியை அவரது காவி ஆடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்















