கிரேண்ட்பாஸ், மஹாவத்த ரயில்பாதை பகுதியில் ஒரு கைத்துப்பாக்கியும், பத்து 9 மி.மீ. தோட்டாக்களும் நிரப்பப்பட்ட மெகசின் மற்றும் 50.300 கிராம் கொக்கெய்ன் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், கொலன்னாவை, சலாமுல்லா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டக் குற்றப் பிரிவு இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.














