பிரித்தானியாவில், கடந்த செப்டெம்பர் மாதம் பணவீக்கம் எதிர்பார்ப்புகளைத் தாண்டி 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஓகஸ்ட் மாதம் 3.1 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், மத்திய கிழக்கு மோதல்களால் எரிபொருள் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து உயர்வடைந்துள்ளது.
குறிப்பாக, செப்டெம்பர் மாதத்தில் பெற்றோல் விலை லீற்றருக்கு 8.2 பென்ஸாலும், டீசல் விலை 10.7 பென்ஸாலும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில், இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவின் மொத்த அரச கடன் முதன்முறையாக மூன்று டிரில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

















