தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான பிரபுதேவா மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தை கிருஷ்ணாநந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குவதோடு இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதேவேளை, இது ஒரு காதல் மையப் திரைப்படமாக உருவாகவுள்ளது.
முன்னதாக ‘விஐபி’, ‘டைம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபுதேவா – சிம்ரன் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















