மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT), தனது நாரஹேன்பிட்டி அலுவலகத்தில் சேவைகளைப் பெறுவதற்கான இணையவழி முன்பதிவு வசதிகள் 2026 நவம்பர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன்படி, வாகனப் பதிவு, உரிமையாளர் மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதற்குப் பொதுமக்கள் இணையவழியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையவழி முன்பதிவு தளமான https://dmtappointments.dmt.gov.lk/ ஊடாக முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
















