இந்தியாவின் அடுத்த தலைமுறை வழிகாட்டல் செயற்கைக்கோளான NVS-03 ஐச் சுமந்த GSLV-F18 ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுதல் இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டல் கட்டமைப்பான ‘NavIC’ அமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், முக்கிய தொழில்நுட்பங்களில் தன்னிறைவை அடைவதற்கான முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக அமையும் எனவும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேம்படுத்தப்பட்ட திறன்களைக் கொண்ட NVS-03 செயற்கைக்கோள், மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டல் சேவைகளை மேம்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.















