கடந்த 2006ஆம் ஆண்டு விர்ஜினியாவில் தன்பாலினத் திருமணங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
எனினும், 2015ஆம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்பாலினத் திருமணங்களுக்கு நாடளாவிய ரீதியில் சட்ட அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து, குறித்த தடை நடைமுறைப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றது.
இந்நிலையில், தடையை அரசியலமைப்பிலிருந்து நீக்கி திருமண சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 56.2 சதவீதமானோர் ஆதரவாகவும், 43.8 சதவீதமானோர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்
இதன் மூலம், பாலின வேறுபாடின்றி இரண்டு வயது வந்தவர்களுக்கு இடையிலான சட்டபூர்வமான திருமணங்களுக்கு விர்ஜினியா மாகாண அரசியலமைப்பில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவுள்ளது.
















