வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் இன்று (7) அதிகாலை நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவ்வீட்டின் உரிமையாளர் உயிரிழந்தார்.
சந்தேகநபர் வீட்டின் உரிமையாளருக்கு மேலதிகமாக அவரது மனைவி மற்றும் மகள் மீதும் தாக்குதல் நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் 56 வயதுடைய வீட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த அவரது மனைவியும் மகளும் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டினருக்கும் வாடகைக்கு இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இக்கூர்மையான ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்காக வாரியப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்















