பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் (CHOGM) 28 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய (07) ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.
இதன்போது, பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்காக உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, பொதுநலவாய உறுப்பு நாடுகள் சிலவற்றின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தியுள்ளார்.
















