உடலில் இரும்புச்சத்து குறைந்து காணப்படுவதால் இரத்தசோகை ஏற்படலாம்.
உடலின் பல்வேறு பகுதிகளுக்கு oxygenஐ கொண்டு செல்ல உதவும் ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்கு இரும்புச்சத்து அவசியமாகும்.
இரும்புச்சத்து குறையும் போது அடிக்கடி சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும்.
மேலும், சருமம் வழக்கத்தைவிட வெளிறிக் காணப்படுதல், சிறிய வேலைகளைச் செய்யும்போதுகூட மூச்சுத்திணறல், இதயத்துடிப்பு அதிகரித்தல், கைகள் மற்றும் கால்களில் குளிர்ச்சியை உணர்தல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
சிலருக்கு முடி உதிர்தல், நகங்கள் எளிதில் உடைதல் மற்றும் நாக்கில் வலி போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும்.
இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டால், மருத்துவரை அணுகி இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

















