செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Anthropic, உலகின் மிகப்பெரிய ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) முன்னெடுக்கத் தயாராகி வருவதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நிறுவனத்தின் எதிர்பார்க்கப்படும் சந்தை மதிப்பு 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பங்குப் பொது வெளியீடு மற்றும் தனியான தனியார் முதலீட்டுச் சுற்று ஆகியவற்றின் ஊடாக மொத்தமாக 90.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பங்கு வெளியீட்டில் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுவதுடன், வெளியிடப்படவுள்ள பங்குகளின் எண்ணிக்கையை விட சுமார் ஏழு மடங்கு அதிகமான பங்குகளைக் கோரி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒக்டோபர் 31ஆம் திகதி நிலவரப்படி, Anthropic நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் விகிதம் 81 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், 2030ஆம் ஆண்டு வரை நிறுவனம் வருடாந்த அடிப்படையில் நேர்மறையான சுதந்திரப் பணப்புழக்கத்தை (Free Cash Flow) பதிவு செய்யாது என Goldman Sachs ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பங்குப் பொது வெளியீட்டின் வெற்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் எதிர்கால முதலீடுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான முக்கிய குறிகாட்டியாக அமையும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

















