பிரித்தானியாவில், அரசாங்கம் உரிய நிதி மற்றும் கொள்கை ஆதரவை வழங்காவிட்டால், யோர்க்ஷயரில் (Yorkshire) அமைந்துள்ள தனது இயற்கை எரிவாயு சேமிப்பு நிலையத்தை அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் மூடப்போவதாக எரிசக்தி நிறுவனமான எஸ்.எஸ்.ஈ (SSE) எச்சரித்துள்ளது.
கிழக்கு யோர்க்ஷயரில் (Yorkshire) உள்ள அட்விக் (Atwick) எரிவாயு சேமிப்பு நிலையம், 1979ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
எட்டு நிலத்தடி சேமிப்பு பகுதிகளை கொண்ட இந்த நிலையத்தில், சுமார் 309 மில்லியன் கன மீற்றர் எரிவாயுவைச் சேமிக்க முடியும்.
தற்போதைய சந்தை நிலவரங்களால் இந்த நிலையத்தைத் தொடர்ந்து இயக்குவது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றதாக மாறியுள்ளதாக SSE தெரிவித்துள்ளது.
எனவே, எரிவாயு விநியோகக் கட்டமைப்பைப் பாதுகாக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் SSE நிறுவனம் கோரியுள்ளது.
















