• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நெடுந்தீவுக்கு புதிய அத்தியாயம்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது!

நெடுந்தீவுக்கு புதிய அத்தியாயம்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது!

New chapter for Nedundi: Fuel for the filling station safely transported and unloaded!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இரண்டு எரிபொருள் பவுஸர்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கடல் வழியாகக் பாரிய படகு மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு கொண்டுசெல்லப்பட்ட எரிபொருள், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இலகுபடுத்துவதற்கான முக்கியமானதொரு கட்டம் எட்டப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட சிரமம் இருந்து வந்தது. இதற்காகத் தீவிலிருந்து குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டதுடன், போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும் மக்கள் எதிர்கொண்டனர்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அங்கு முதன்முறையாக நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி நிகழ்வின்போது, நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டு வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளமை, நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நனவாக்கும் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோர், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அவசர மருத்துவத் தேவைகள், கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இது துணைபுரியும்.

தீவுப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் மற்றுமொரு அடையாளமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

Related

Tags: New chapter for Nedundi: Fuel for the filling station safely transported and unloaded!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிமன்ற உத்தரவை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வழக்கு – கஸ்ஸப தேரருக்கு பிணை

Related Posts

நீதிமன்ற உத்தரவை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வழக்கு – கஸ்ஸப தேரருக்கு பிணை
இலங்கை

நீதிமன்ற உத்தரவை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வழக்கு – கஸ்ஸப தேரருக்கு பிணை

2026-11-26
யாழ். பிரதான வீதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுமதியற்ற உணவகக் கட்டுமானம் அகற்றம்
இலங்கை

யாழ். பிரதான வீதியில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அனுமதியற்ற உணவகக் கட்டுமானம் அகற்றம்

2026-11-26
பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!
இலங்கை

பொலிஸ் ரி-56 துப்பாக்கியை குற்றக் கும்பலிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிய சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

2026-11-26
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறப்பு – கீழ்ப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

2026-11-26
பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது
இங்கிலாந்து

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

2026-11-25
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை
இங்கிலாந்து

பிரித்தானியாவால் எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை

2026-11-25

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
நெடுந்தீவுக்கு புதிய அத்தியாயம்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது!

நெடுந்தீவுக்கு புதிய அத்தியாயம்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது!

0
நீதிமன்ற உத்தரவை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வழக்கு – கஸ்ஸப தேரருக்கு பிணை

நீதிமன்ற உத்தரவை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வழக்கு – கஸ்ஸப தேரருக்கு பிணை

0
WhatsAppஇல் புதிய ‘Scheduled Messages’ வசதி அறிமுகம் – செய்திகளை முன்கூட்டியே திட்டமிடலாம்

WhatsAppஇல் புதிய ‘Scheduled Messages’ வசதி அறிமுகம் – செய்திகளை முன்கூட்டியே திட்டமிடலாம்

0
டிசம்பர் 5ஆம் திகதி ராகு – கேது பெயர்ச்சி: கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள்

டிசம்பர் 5ஆம் திகதி ராகு – கேது பெயர்ச்சி: கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள்

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 .11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 26 .11. 2026

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: