ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற அவதார் திரைப்படத் தொடரின் நான்காம் பாகம் உருவாகவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவதார் 4 திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை டிஸ்னி நிறுவனம் தனது எதிர்காலத் திரைப்பட வெளியீட்டுப் பட்டியலில் இணைத்துள்ளது.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற டிஸ்னி நிறுவன நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அவதார் 4 திரைப்படம் 2029ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அத்துடன், அவதார் 5 திரைப்படம் 2031ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2009ஆம் ஆண்டு வெளியான முதல் அவதார் திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை படைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அவதார்: தி வே ஒஃப் வோட்டர் மற்றும் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
எனினும், அதிகரித்து வரும் திரைப்படத் தயாரிப்புச் செலவுகள் காரணமாக அவதார் தொடரின் அடுத்தடுத்த பாகங்கள் தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்பட்டது.
முதல் மூன்று திரைப்படங்களும் இணைந்து உலகளவில் சுமார் 6.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















