ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு
In இந்தியா May 4, 2019 7:32 am GMT 0 Comments 2087 by : Yuganthini

ஜம்மு காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷோபியான் மாவட்டம், இமாம் சாஹிப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நீண்ட நேரம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 3 தீவிரவாதிகளை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஆனாலும் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.