கிழக்கு மாகாண சபைக்கான புதிய வளாகம் நிர்மானிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டடத் தொகுதி இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பு.எஸ்.ரத்னாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டு கட்டடத் தொகுதியினை திறந்துவைத்தார்.
கிழக்கு மாகாண சபை நிர்வாகக் கட்டமைப்பின் கீழான அனைத்து நிர்வாக அமைச்சுக்களும் குறித்த கட்டத்தொகுதிலேயே மக்களின் சேவைகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச சேவை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.