நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 305 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி நேற்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களை பெற்றிருந்தது.
கமிந்து மெண்டீஸ் 114 ஓட்டங்களை அதிகபடியாகப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இலங்கை அணி மேலதிகமாக 3 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 305 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூஸிலாந்து சார்பில் அதிகபடியாக வில்லியம் ஓ ரூர்க் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
நியூஸிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கும் போது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓவர் நிறைவில் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களை பெற்றுள்ளது.

















