கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தொலைதூரங்களில் உள்ள மாணவர்களுக்கு இணைய வகுப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாடசாலை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.