ஹைட்டியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட முக்கிய நீதிபதி மற்றும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி உட்பட 23பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது பதவிக் காலம் முடிவடையும் என ஜனாதிபதி ஜோவனல் மோஸ், வலியுறுத்துகின்ற போதும் அது ஞாயிற்றுக்கிழமை முடிந்தது என கூறி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் மற்றும் பிற நகரங்களின் வீதிகளில் இறங்கி எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸாருக்கும் எதிர்பார்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடிக்க, பொலிஸார் இதற்கு கண்ணீர்ப்புகைக் கொண்டு பதிலளித்தனர்.
இதனிடையே, தன்னைக் கொன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக ஹைட்டியின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்ப்பாளர் எட்டியென் ஜீன் டேனியல் கூறுகையில், ‘ஜோவெனல் மோஸ் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பு மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இந்த மக்களை விரைவாக விடுவிக்க நான் கோருகிறேன்’ என கூறினார்.