அந்தாட்டிக்கா கண்டத்தின் அருகில் கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கடியில் ஆய்வு நடத்தினர்.
900 மீட்டர் ஆழத்தில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன்போது இதுவரை பார்த்திராத சில வகை பூஞ்சைகளும், சிறிய புழுக்களும் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இந்த வகை உயிரினங்களும், பூஞ்சைகளும் தற்போதுதான் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.