கல்கிரியாகம- ஆடியாகல பகுதியிலுள்ள வீடொன்றில், நிர்மாணிக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒரு வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்றவேளையில் வீட்டில் அனைவரும் இருந்துள்ளதுடன், வீட்டாரின் கவனயீனத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















