ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், இந்த தாக்குதலை யார் ஏற்பாடு செய்தார்கள், ஆதரித்தார்கள் என்பதைக் குறித்த ஆணைக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
தேவாலயங்களில் தன் மக்கள் எவ்வாறு துண்டு துண்டாக கிழிக்கப்பட்டார்கள் என்பதை தான் கண்டேன் என்றும் அரசியல் நலன்களுக்காக உழைக்கும் தலைவர்களை தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த அறிக்கை சிறிய தடயங்களை வழங்கியிருந்தாலும் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களை அது அடையாளம் காணவில்லை, எனவே அது ‘முழுமையற்ற அறிக்கை’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தந நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.