இந்தியாவில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 394 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், அதைத்தொடர்ந்து பெப்ரவரி 2ஆம் திகதி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் கடந்த முதலாம் திகதி முதல் 60 வயதை கடந்தவர்களுக்கும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3 கோடியே 29 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.